வாகனங்கள் மோதல்
உளுந்துார்பேட்டை: ஜூன் 4-: திருவாரூரை சேர்ந்த பசுபதி, 21; இவர், டி.என்.50.ஏஎம்.5862 பதிவெண் கொண்ட தோஸ்த் வாகனத்தில், சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். நேற்று காலை 7 மணியளவில் கெடிலம் ஆற்றுப்பாலத்திற்கு முன்புறம் சாலையோரம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
அப்போது, அதே திசையில் திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூரை சேர்ந்த நிஷாந்த், 24; ஓட்டி வந்த மினி வேன் (டாடா 407) சாலையோரம் நின்றிருந்த தோஸ்த் வாகனத்தின் மீது மோதியது. இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. திருநாவலுார் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement