இலவச யோகா பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம், ஜூன் 5-

உலக யோகா தினத்தை முன்னிட்டு தனக்கன்குளம் யோகா நகரில் உள்ள சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் இலவச யோகா பயிற்சி முகாம் ஜூன் 10ல் துவங்குகிறது.

ஜூன் 21 வரை தினம் காலை 7:00 முதல் காலை 8:00 மணிவரை ஆண்களுக்கும், காலை 10:00 முதல் காலை 11:00 மணி வரை பெண்களுக்கும், மாலை 6:00 முதல் 7:00 மணி வரை இரு பாலாருக்கும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், நோய் தாக்கம் உள்ளவர்களுக்கும் தனியாக யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. விரும்புவோர் 9344118764ல் விவரம் அறியலாம் என தமிழ்நாடு யோகாசன சங்கத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

Advertisement