சிலிண்டர் வினியோகத்தில் சுணக்கம்: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

ஊட்டி: 'ஊட்டியில் உள்ள பாரத் காஸ் சிலிண்டர் நிறுவனம் முறையாக, பொதுமக்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யவில்லை,' என கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள பாரத் காஸ் சிலிண்டர் நிறுவனத்தில், 45 நாட்களுக்கு முன் புக்கிங் செய்த பலரும், நேற்று சிலிண்டர்கள் எடுப்பதற்காக வந்தனர். ஆனால், உடனடியாக சிலிண்டர் வழங்கவில்லை.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்படுத்தியால், அங்கு சிலிண்டர்கள் வாங்க கூடியிருந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து தடைப்பட்டது. சாலையில் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. பின், அங்கு வந்தவர்களுக்கு இருப்பில் இருந்த சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது.



Advertisement