சிகிச்சை பெறுவோருக்கு இலவச உணவு வழங்கல்
உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனை வளாகம் முன், கை கொடுக்கும் கரங்கள் சார்பில், நுாறாவது நாளாக, இலவச உணவு வழங்கப்பட்டது.
உடுமலை அரசு மருத்துவமனை முன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கும், அவர்களுடன் தங்கியுள்ளவர்களுக்கும், இலவச உணவு வழங்கும் பணி, ‘கை கொடுக்கும் கரங்கள்’ என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக ஆர்வலர் சரவணகுமார் என்பவரால், இப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில், நுாறாவது நாளாக இலவச உணவு வழங்கப்பட்டது.
இதையொட்டி, சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடனிருக்கும் மக்களுக்கு, பழங்கள், ரொட்டி மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாள்தோறும் இரவு நேர உணவு வழங்கும் இச்சேவையை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement