மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: போலீசில் புகார்
சென்னை: சென்னை மின்வாரியத்தில் 10 ஹார்ட் டிஸ்க்குகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போனதில் நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கியவை இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சர் சொல்வது என்ன?
இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மின்வாரியத்தில் எத்தனை ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டது என்று விசாரணை நடக்கிறது. அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு தான் திருட்டு நடந்துள்ளது. முறைகேடு விசாரணை தொடங்கிய பிறகே திருட்டு நடந்துள்ளன. ஒப்பந்த தொழிலாளர் பணி நியமனம் தொடர்பான ஹார்ட் டிஸ்க்கும் காணவில்லை. மின்சாரத் துறையில் முக்கியமான ஹார் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகு காரணம் தெரியவரும். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் நடந்த டிரான்ஸ்பார்மர் முறைகேடுகள் குறித்து ஆவணங்கள் சிபிஐயிடம் கொடுக்கப்பட்டது. ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
இதனிடையே, இது தொடர்பாக உதவி பொறியாளர் மலர்விழி அளித்த புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
யாருக்காக ஹார்ட் டிஸ்க்குகளை அவர் திருடினார் என்றும், அவருக்கு பணம் கொடுத்தது யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போன நிலையில், எஞ்சியுள்ள ஆவணங்களை பத்திரப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மின்வாரியத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, மின்வாரிய கோப்புகளை பத்திரப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் பகீர் பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இதில் சந்தேகமில்லாமல் தீயசக்தியும் ஆளும் சக்தியும் கூட்டுக் களவாணிகள்.
ஹி...ஹி.... ஹார்ட் டிஸ்க் திருட்டுங்கறது எல்லாம் புருடா அந்தந்த டிபார்ட்மெண்ட்
தலையை பிடிச்சி சூட்டைக் கிளப்பினா. எல்லா சமாசாரமும் வெளில வரும். அத்தினி பேரும் ஃபேமிலி மேன் தானே உடனே காதும் காதும் வச்சமாதிரி கேஸ் ரெடி பண்ணி சம்பந்தப்பட்ட நபர்-இல்லைன்னா அவருக்கு இருந்த கைத்தடிகளை லாக் பண்ணா, கேஸ் ஸ்டிராங்காகும். அத்தனையும் வெளில வந்துடும். உடனுக்குடன் பப்ளிசிட்டி வேணும்னு தவெக ஆளுங்க நினைக்கறதாலே, எல்லாம் நழுவிப் போயிடும். ஏன்னா தீயசக்தி தலைகள் எல்லாம் விஞ்ஞான ஊழலில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் படித்த திருவாரூர் பல்கலைகழகம் பேர் பெற்றது.
ஜாக்கிரதை உஷார்
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? ஆயிரம் வழிகள் இருக்கிறது. பத்து ரூபாயின் தோலைபேசி ஒன்றே போதும்.
எனக்கென்னவோ உண்மையில் காணாமல் போயிருப்பதாக தோன்றவில்லை. திமுக தானே கூட்டணி ஆட்கள் மூலம் ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறது?.
மின் வாரியத்தில் ஊழல் நடந்துள்ளது என த.வெ.க மின் துறை அமைச்சர்தானே முதல் நாளே கூறினார். அப்போதே ஆதாரங்களை பாதுகாக்கும் வேலையை அமைச்சர் தீவிரப் படுத்தி இருக்க வேண்டாமா? சின்னப் பிள்ளைகள் வெள்ளாமை என்பது சரியாகத்தான் இருக்கிறது.
நேரா சிபிஐ விசாரணை தான். கணினி துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்
எல்லா பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஹார்ட்டிஸ்க் கரப்ட், கிராஷ் ஆகக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் கிளவுட் ஸ்டோரேஜ் உபயோகிப்பார்கள். இங்கே கிளவுட் ஸ்டோரேஜ் இருக்குமல்லவா?
அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க கூடாது வைக்கறது திருட்டு அதை கிளவுட் ல வச்சா திராவிட மாடல் கண்மணிகளில் மாட்டிக்குவாங்க
ஒரு வேளை அந்த CLOUD SOURCE தேனாம்பேட்டை அண்ஆலயத்தில் இருக்கலாம்.
எல்லாரும் திருடனுகதான்
திமுகவை காட்டிக்கொடுங்கள் / போட்டுக்கொடுங்கள் என்று சொல்லி டிவிகே அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா >>