ஸ்வீடனில் இருந்து வந்த போன் அழைப்பு: துரிதமாக செயல்பட்டு உயிர் காத்த மதுரை தீயணைப்பு வீரர்கள்
மதுரை மாநகர் ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரியான நாகராஜன்(85). இவரது மகன் ஸ்வீடன் நாட்டிலும், மகள் வேலூரிலும் வசித்து வருகின்றனர்.
நாகராஜனின் மனைவி கொரொனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் நாகராஜன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகின்றார். இவருக்கு நாள்தோறும் ஆன்லைன் மூலமாக மூன்று வேளையும் உணவு டெலிவரி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நேற்று மதிய உணவை வீட்டின் வெளியே வைத்துசென்ற நிலையில் இரவு நேர உணவு கொண்டுவந்தபோது மதியம் டெலிவரி செய்யப்பட்ட உணவு எடுக்கப்படாத நிலையில் சந்தேகமடைந்த உணவு டெலிவரி ஊழியர் எதிர் வீட்டில் கூறியுள்ளார்
பின்னர் ஸ்வீடனில் உள்ள நாகராஜனின் மகனுக்கு தகவல் அளித்தபோது நாகராஜனின் செல்போனை தொடர்பு கொண்ட போதும் நீண்ட நேரமாக போனை எடுக்காத நிலையில் ஸ்வீடனில் இருந்த மகன் மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து சென்ற மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நாகராஜனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது நாகராஜன் கழிவறை அருகே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட தீயணைப்புதுறையினர் நாகராஜனுக்கு ஆறுதல் கூறி எந்தவித பதற்றமும் படவேண்டாம் எனக்கூறி உறவினர்கள் மூலமாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ஸ்வீடனில் வந்த அழைப்பை ஏற்று முதியவரை மீட்ட பின்பு அவரை அரவணைத்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து (11)
Vasan - ,இந்தியா
04 ஜூன்,2026 - 17:18 Report Abuse
வயதான, துணைவியார் இல்லாத வயோதிகர் தனியே வசிப்பது ஆபத்து அல்லவா? அவரது மகன், மகள் உணர வேண்டும். 0
0
Reply
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 14:39 Report Abuse
வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு சுவீடனில் இருந்து போன் பண்ணியோ சுவிற்சர்லாந்தில் இருந்து போன் பண்ணியோ என்ன பிரயோசனம். atleast மகன் மகள் இருவரில் யாரேனும் ஒருவர் அருகில் இருக்க வேண்டும் அல்லது அவரை முதோயோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும், முதியோர் இல்லத்தில் கனிவான பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு, நட்பு வட்டங்கள், மருத்துவ வசதி என்று பல உதவிகள் உண்டு. அவருக்கு உங்களின் பணமோ, பொருளோ தேவை இல்லை. உறவுகளின் அருகாமை வேண்டும், இதனை புரிந்து கொள்ளுங்கள். 0
0
M Ramachandran - Chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 15:57Report Abuse
பெரும்பாலும் சென்னைமா நகரில் இருக்கும் வயாதானவர் நிலையய் இது போல் தான். அயல் நாட்டில் வேலைய்ய அவர்கள் குடும்ப நிலை. பெற்றோருடன் சேர்ந்து இருக்க முடியாத நிலை. 0
0
Reply
B N VISWANATHAN - chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 14:07 Report Abuse
தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்கள். 0
0
Reply
Sesh - Dubai,இந்தியா
04 ஜூன்,2026 - 14:00 Report Abuse
முதிய வயதில் தனியாக / வசதியாகவும் இருப்பதற்கு, வசதியுடன் கூடிய பல்நோக்கு முதியோர் இல்லங்கள் சிறந்தது , அதுவும் மகன் மகள் வெளிநாட்டில் இருக்கும்போது அதுவே சிறந்தது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 ஜூன்,2026 - 13:04 Report Abuse
இப்படியும் சிறப்பாக பணிபுரியும் ஒரு சில அரசு பணியாளர்கள். வாழ்க அவர்கள். வாழ்க அவர்கள் குலம். 0
0
Reply
Sureshkumar - Coimbatore,இந்தியா
04 ஜூன்,2026 - 12:35 Report Abuse
தீயணைப்புத்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 12:12 Report Abuse
0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
04 ஜூன்,2026 - 12:09 Report Abuse
மனிதம் இருக்கிறது. பாராட்டுக்கள். 0
0
Reply
Mahesh Rajan - ,
04 ஜூன்,2026 - 11:30 Report Abuse
அன்புக்குரிய தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் துணிச்சல், கருணை மற்றும் அயராத சேவை மிகவும் பாராட்டத்தக்கது. 0
0
Reply
Diraviam s - CHENNAI,இந்தியா
04 ஜூன்,2026 - 11:11 Report Abuse
பாராட்டுக்கள். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement