மின்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் சேதமான மின்கம்பம்
சிவகாசி:சிவகாசி மின்சார வாரியம் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மின் நிலையத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி திருத்தங்கல் ரோட்டில் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள மின் நிலையத்திலிருந்து நகர் முழுவதும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக இங்கு நிறைய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை சேதமடைந்துள்ளது. வெறும் துருப்பிடித்த கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கின்றது. பெரிய காற்று அடித்தாலோ மழை பெய்தாலோ கீழே விழ வாய்ப்பு உள்ளது. சேலம் அடைந்த மின் கம்பங்களில் வெறும் பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பைகளை தரம் பிரிக்க மக்களுக்கு விழிப்புணர்வு
-
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சாதனை
-
ஆணைக்குன்னம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம்
-
எண்ணுார் படகு குழாம் தண்ணீர் வற்றியதால் மூடல்
-
வேளாண் கூட்டுறவு வங்கியை இயக்க விவசாயிகள் கோரிக்கை
-
அம்பத்துார் தொழிற்பேட்டையில் சிறப்பு தொழில் கடன் முகாம்
Advertisement
Advertisement