சாலையில் கழிவுநீர்

தட்டாஞ்சாவடி, கொட்டுப்பாளையம் மெயின் ரோடு, முல்லை வீதி, வாய்க்கால் சிலாப் உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

ராமலிங்கம், தட்டாஞ்சாவடி.



தெரு விளக்கு எரியுமா?

இந்திரா நகர் தொகுதி, கோவிந்தபேட்டை, கோவிந்தன் கோவில் வீதியில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

விஜய், புதுச்சேரி.



குடிநீர் விரயம்

நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலை அரசு பள்ளி பின்புறம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி விரயமாகிறது.

கோபாலகிருஷ்ணன், நெல்லித்தோப்பு.



கழிவுநீர் வாய்க்கால் தேவை

மங்கலம் உறுவையாறு, பெருமாள் சிலைமேடு பகுதி சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது.

புவனேஷ், உறுவையாறு.



போக்குவரத்து இடையூறு

மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குரவத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

சங்கர், மரப்பாலம்.



போக்குவரத்து நெரிசல்

இந்திரா சதுக்கம் ரெட்டியார்பாளையம் சாலையில், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சங்கரி, புதுச்சேரி.

Advertisement