மாணவ - மாணவியருக்கு புத்தகம் சீருடைகள் வழங்கல்

திருப்போரூர்:மாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியருக்கு நேற்று இலவச புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 1,600 மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியருக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருப்போரூர் எம்.எல்.ஏ., விஜயராஜ், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ - மாணவியருக்கு புத்தகங்களை வழங்கினர்.

Advertisement