ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவ விழா
வானுார்: திருச்சிற்றம்பலம் ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவ விழா நடந்தது.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள , ஏழை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1ம் தேதி அய்யனாரப்பனுக்கு அபிேஷகத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் கூழ்வார்த்தலும், மாலை 5;00 மணிக்கு செடல் உற்சவ விழா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், கார், வேன்கள் இழுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 9;00 மணிக்கு ஏழை மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.
நேற்று மாலை 6;00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொது மக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement