விழுப்புரம் எம்.எல்.ஏ., நன்றி தெரிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதிகளில் லட்சுமணன் எம்.எல்.ஏ., பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தொகுதி முழுவதும் சென்று, நகரம், ஒன்றியங்கள் வாரியாக பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

விழுப்புரம் 5வது வார்டு குச்சிப்பாளையம், எருமணந்தாங்கல் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, காகுப்பம், ரசாக்லேஅவுட், கீழ்ப்பெரும்பாக்கம், மருதுார், பவர் அவுஸ் சாலை, கிழக்கு சண்முகபுரம், கலேஜ்ரோடு, மகாராஜபுரம், ஆசிரியர் நகர், ராகவன்பேட்டை, பாணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில், கட்சியினருடன் சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தும் இனிப்புகள் வழங்கியும், நன்றி தெரிவித்தார்.

விழுப்புரம் தி.மு.க., கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜா, கவுன்சிலர் நந்தாநெடுஞ்செழியன், நிர்வாகிகள் காசிநாதன், சேகர், சூரியமூர்த்தி, ஆறுமுகம், வெங்கடேசன், குணசேகரன், அருண், முருகையன் சக்திவேல், ஜெகநாதன், சூரியா, காமராஜ், உமா, பாலு மற்றும் தி.மு.க., மாவட்ட, நகர நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement