போலீஸ் நிலைய புதிய கட்டடம் பணிகள் துவக்கம்
பண்ருட்டி: பண்ருட்டி அருகே போலீஸ் நிலைய புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையம், தமிழக காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், புதிய கட்டடம் ரூ.1.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி நேற்று நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
இதில் டி.எஸ்.பி.கந்தன், தமிழக காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் சாந்தி லட்சுமி, ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement