பஸ் படிகளில் பயணம் தவிர்க்க 80 இடங்களில் விழிப்புணர்வு
சென்னை: சென்னையில், காலை, மாலை அலுவலக நேரங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்போது மாணவர்கள், ஆபத்தான முறையில் மாநகர பேருந்துகளின் படிகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர்.
இதனால் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க, சென்னையில் 80 இடங்களில், மாநகர போக்குவரத்து கழக அலுவலர்கள் நேற்று, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்கள் படிகளில் பயணம் செய்வதை தடுக்க, மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்துள்ள நிலையில், மாணவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில், முக்கியமான பேருந்து முனையங்கள், நிலையங்கள் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
புதிய பாஸ் வழங்கும் வரை, பழைய பாஸ், அடையாள அட்டையை பயன்படுத்தி, மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாணவர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பஞ்சமி நில சுற்றறிக்கையை செயல்படுத்தக்-கோரி மனு
-
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
-
கழிவுநீர் தேக்கமாக மாறிவிட்டது வேகவதி ஆறு ...விபரீதம்! சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மக்கள் திண்டாட்டம்; மாநகராட்சியை குறைகூறும் நீர்வள ஆதாரத்துறை
-
மழையால் மண்டிகளில் 'மா' கொள்முதல் குறைவு உரிய விலை நிர்ணயிக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
-
'எண்ணேகொள் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
-
கோடை விடுமுறை முடிந்து கி.கிரி மாவட்-டத்தில் 2,068 பள்ளிகள் திறப்பு