கோடை விடுமுறை முடிந்து கி.கிரி மாவட்-டத்தில் 2,068 பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி; தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் ஜூன், 1ல், திறப்பதாக அறிவிக்கப்பட்டி-ருந்த நிலையில், அதிக வெயில் தாக்கத்தால் ஜூன், 4ல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்-கப்பட்டது. அதன்படி நேற்று, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்-டத்தில், 1,285 அரசு மற்றும் தனியார் துவக்க பள்-ளிகள் அதே போல், 324 அரசு மற்றும் தனியார் நடு
நிலைப்பள்ளிகள், 227 அரசு மற்றும் தனியார் உயர்-நிலைப் பள்ளிகள், 232 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் என மொத்தம், 2,068 பள்-ளிகள் நேற்று திறக்கப்பட்டன.


முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவி-யரை, பள்ளியில் உள்ள ஆசிரிய, ஆசிரியைகள் சாக்லேட், மலர் கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஆசிரியர்களின் அன்பான வர-வேற்பை ஏற்ற மாணவ, மாணவியர் உற்சாகத்-துடன் பள்ளிக்குள் சென்றனர். அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Advertisement