மழையால் மண்டிகளில் 'மா' கொள்முதல் குறைவு உரிய விலை நிர்ணயிக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இந்தாண்டு மாம்பழ விளைச்சல் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. கோடையில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தால், பல பகுதிகளில், 'மா' விளைச்சல் பாதித்த நிலையில், விவசாயிகள் கூடுதல் செலவுகளை மேற்கொண்டு தோட்டங்களை பாதுகாத்து வந்-தனர்.


இந்நிலையில், அறுவடை செய்த மாங்காய்-களை விவசாயிகள், காவேரிப்பட்டணம் பகுதியி-லுள்ள மாங்காய் மண்டிகளுக்கு கொண்டு வந்து, ஏலத்தில் விற்பனை செய்தனர். ஆனால் எதிர்-பார்த்த அளவுக்கு வியாபாரிகள் வராததாலும், மாங்காய் அதிகளவு வந்ததாலும், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இந்த ஏலத்தில், மல்கோவா, 30 கிலோ கொண்ட கிரேடு வழக்கமாக, 3,000 ரூபாய்க்கு ஏலம் போன நிலையில் நேற்று, 1,300 முதல், 2,000 ரூபாய்க்கு மட்டுமே விற்றது. அதேபோல், பெங்களூரா, 200 முதல், 300 ரூபாய் வரையும், செந்துாரா, 300 முதல், 600 ரூபாய் வரையும், அல்போன்சா, 250 முதல், 600 ரூபாய் வரையும், பீத்தர், 350 முதல், 500 ரூபாய் வரையும், பையன்பள்ளி, 400 முதல் 600 ரூபாய் வரையும் விற்பனையானது. இந்த விலை சரிவு, விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 'மா' தோட்டங்களில் உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல், தொழி-லாளர் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய விற்பனை விலை உற்-பத்தி செலவைக்கூட ஈடுகட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரி-வித்தனர்.
இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, 'வழக்கமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்-ளிட்ட மாநிலங்களிலிருந்தும், சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களி-லிருந்து ஏராளமான வியாபாரிகள் மாங்காய் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த வாரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால், வியாபாரிகள் கொள்முதல் செய்-வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், மண்டி-களில் போட்டி ஏலம் குறைந்து, மாங்காய்கள் குறைந்த விலைக்கே விற்றது. இந்தாண்டும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், மாங்காய்களுக்கு அரசு உரிய ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்' என்றனர்.

Advertisement