விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

கிருஷ்ணகிரி; சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை, சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகிய-வற்றால் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராள-மான பக்தர்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். மஞ்சள் காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்க-ளுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்த பிரசாதம் வழங்கப்-பட்டன. இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வர-சித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், டான்சி வளாகம் செல்வ விநாயகர் கோவில், கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநா-யகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என, பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement