பஞ்சமி நில சுற்றறிக்கையை செயல்படுத்தக்-கோரி மனு
கிருஷ்ணகிரி; தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறளிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலம், ஆதிதிராவிடர் மக்களுக்கு நிபந்தனை அடிப்ப-டையில் அரசு வழங்கி உள்ளது. இந்த நிலங்-களும், ஆங்கிலேயர் ஆட்சியில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும், தற்சமயம் தமிழகம் முழு-வதும் பட்டியல் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூக தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நில ஆணையர் கடிதத்தின் படி, 'அ' பதிவேடுகளில், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிபந்தனைக்கு உட்-பட்ட நிலங்கள் என நிர்ணயம் செய்யப்பட்ட-வற்றின் சர்வே எண், கிராமம் போன்ற தகவல்-களை ஒவ்வொரு தாலுகா அலுவலகங்கள், வி.ஏ.ஓ., அலுவலகங்களில் பட்டியலிட வேண்டும். தலித் அல்லது பட்டியல் சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் தவறான நபர்களிடம் இருந்தால், ஜமாபந்தி செயல்முறையிலேயே, அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை கடந்த, 2004 மார்ச், 11ல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய, சென்னை மண்டல இயக்குனரின் செயல்முறைகள் ஆணை கடிதம் மூலமாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்-பப்பட்டுள்ளது. இதை நடைமுறை படுத்த-வில்லை.எனவே, பஞ்சமி நிலம் மற்றும் ஆதிதிராவிட மக்-களுக்கான நிபந்தனை அடிப்படையிலான நிலங்கள் ஜமாபந்தியின் போது அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சுற்றறிக்கை குறித்து, விழிப்புணர்வு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.