மக்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்; திருப்பரங்குன்றம் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில், தனி நீதிபதி உத்தரவுப்படி தீபம் ஏற்றாததன் காரணமாக தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.
இம்மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு முன் ஏப்., 8ல் விசாரணைக்கு வந்தபோது, இவ்விஷயத்தில் சட்ட பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு ஜூன் 4 வரை இடைக்கால தடை விதிப்பதாகவும், அடுத்தகட்ட விசாரணையின் போது,தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தன் நிலைப்பாடு, பரிந்துரைகளை மாநில அரசு தரப்பில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இன்று மீண்டும், இந்த அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் பாலாஜி, தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன், ராம ரவிக்குமார் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகினர்.
அரசு தரப்பு, 'இவ்வழக்கு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்ய இரண்டு வாரம் அவகாசம் தேவை' என்றது.
ராம ரவிக்குமார் தரப்பு, 'முந்தைய தமிழக அரசு தான் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்தவில்லை. தற்போதைய அரசு அவ்வுத்தரவை செயல்படுத்தும் என நம்புகிறோம். அதனால் அரசுக்கு அவகாசம் அளிப்பதில் ஆட்சேபனை இல்லை' என, தெரிவித்தது.
தர்கா தரப்பு, 'தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எங்கள் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.
ராம ரவிக்குமார் தரப்பு, 'ஏற்கனவே ஒரு உத்தரவின் மீது பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதனால் இவ்வழக்கில் தர்கா தரப்பு மேல்முறையீடுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள், 'நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது. சாதாரண விஷயத்தை சிக்கலாக்க ஏன் முயற்சிக்கிறீர்கள் என, முந்தைய அரசிடமே தெரிவித்திருந்தோம். அதுவே இந்நீதிமன்றத்தின் நிலைப்பாடும் கூட. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுமா, செல்லாதா என, நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்.
இது ஜனநாயக நாடு. மக்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள். இவ்விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதலில் தெரிவியுங்கள்' என, உத்தரவிட்டு, ஜூன் 22க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து (12)
raja - Cotonou,இந்தியா
05 ஜூன்,2026 - 06:19 Report Abuse
இந்த விசயத்துக்காகத்தான் முந்தைய இந்து விரோத திருட்டு திராவிட மாடல் திமுக அரசை இருபத்தி எட்டு கட்சிகளின் கூட்டணி வைத்தும் சுடலையை தமிழர்கள் சரியான ஆப்பை செருகி அடித்து விரட்டினார்கள்... இப்போதைய மைனாரிட்டி அரசும் இதுபோல இந்து விரோதத்தை தொக்கி பிடித்து சிறுபான்மையினரை திருப்தி படுத்த முயன்று இந்துக்களின் உரிமைகளை நசுக்க முற்பட்டால் வரும் தேர்தல்களில் ஒட்டு மொத்த தமிழ் இந்துக்கள் இவர்களை அடித்து விரட்டுவார்கள்... 0
0
Reply
pmsamy - ,
05 ஜூன்,2026 - 06:00 Report Abuse
சட்டப்படி மக்களுக்கு நன்மை எதுவும் செய்ய முடியலைன்னா மூடிக்கிட்டு போங்க. மக்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
05 ஜூன்,2026 - 05:58 Report Abuse
பொறுத்தது போதும் ஹிந்துக்களே அ நீதிமன்றங்களோ, ஊழல் அரசுகளோ - சனாதனத்துக்கு ஏற்பட்டுள்ள இழிவையும், அவலங்களையும் அகற்றப்போவது இல்லை.
பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் ஆகும். ஹிந்துக்கள் திரண்டு சென்று தீபம் ஏற்றிவிட்டு வாருங்கள். மலைக்குமேல் வேறு எதாவது ஆக்ரமிப்புகள் இருந்தால் அதையும் அகற்றிவிட்டு வாருங்கள் 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
05 ஜூன்,2026 - 04:08 Report Abuse
உணர்ச்சியற்ற இந்துக்களுக்கு எப்படி உணர்வு என்று ஒன்று இருக்க முடியும்? இந்து மதத்தின் ஆணிவேரான சனாதனத்தை கொசுவை அழிப்பது போல அழிப்பேன் என்று சொன்ன பொழுது கூட ஒருவரும் நீதிமன்றம் போகவில்லை. 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
05 ஜூன்,2026 - 00:16 Report Abuse
சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதால் மக்கள் சட்டங்களை படித்தறியும் திறன் இல்லை .அறநிலைய சட்டம் 1959 இல் எங்குமே அரசு கோயில்களை ஏற்றுநடத்தும் சட்ட வடிவுகள் இல்லை .இந்த சட்டம் தவறாக அறியப்பட்டு நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதால் இப்போது மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை .மற்ற மதவிழையங்களைப் போலவே ஹிந்து மத கோயில்களிலும் அரசு தலையிடும் குறிப்புகள் இல்லை . அப்படி இருந்தால் அது எல்லோரும் சட்டத்திற்குமுன் சமம் என்ற கோட்பாட்டிற்க்கு எதிரானதுதானே .அது அரசியல் அமைப்பு சட்டமீறல் இல்லையா ?இதை ஏன் நீதிமன்றங்களும் கேள்விகேட்பதில்லை .ஒருமுறை திரு .சிவகாசி பேராசிரியர் ராமச்சந்திரனிடம் சட்டத்தை படித்து சரியான மொழிபெயர்ப்பை கேட்டு அறியலாம் .இந்த விவகாரத்தில் அரசு ஒரு வாதியோ ,பிரதிவாதியோ இல்லை .தர்காவுக்கும் கோயிலுக்கும் இடையே பிரச்னை இருந்தால் 1930ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீர்த்துவைக்கலாம் .அரசு ஒழுஙங்குபிரச்சனையைமட்டுமே கையாளலாம் .நீதிமன்றம் அரசிடம் இனியும் கெஞ்சக்கூடாது . 0
0
Reply
ஜெகதீசன் - ,
04 ஜூன்,2026 - 23:31 Report Abuse
இந்த அரசை ஆட்டுவிக்கும் பின்புலம் தீபம் ஏற்ற சம்மதிக்க மாட்டாங்க. ஒரு மத நம்பிக்கையை ஒழிக்கணும் என சட்டமன்றத்தில் சொல்லியதை கண்டிக்காத அரசு தான் இது. 0
0
Reply
Tamilan - ,இந்தியா
04 ஜூன்,2026 - 23:10 Report Abuse
நீதிபதிகளுக்கே இவ்வளவு நடிக்க தெரிந்தால், ஒரு நடிகருக்கு அவரின் கீழ் உள்ள அமைச்சர், அரசு பதவிகளில் உள்ளவர்களுக்கு இவர்களுக்கு மேலும் நடிக்க தெரியும் . 0
0
Reply
Rajkumar Ramamoorthy - ,இந்தியா
04 ஜூன்,2026 - 23:10 Report Abuse
அரசு மௌன விரதத்தில் இருக்கிறது . 0
0
Reply
Tamilan - ,இந்தியா
04 ஜூன்,2026 - 23:09 Report Abuse
இது அரசியல்வாதிகளின் வேலை 0
0
Reply
Tamilan - ,இந்தியா
04 ஜூன்,2026 - 23:08 Report Abuse
மக்களின் உணர்வு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோர்ட்டுகளில் நீதிபதிகளாக உள்ள ஒரு சில இந்து மதவாத மாபியாக்கள் ரவுடித்தனம் அட்டூழியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் . கடந்த பத்தாண்டுகளில் இது பலமடங்கு பெருகிவிட்டது. நாட்டில் எங்கும் எதிலும் மாபியாக்கள் , குண்டர்கள், கொள்ளையர்கள். 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 23:32Report Abuse
புண்ணாக்கு. 0
0
SULLAN - chennai,இந்தியா
05 ஜூன்,2026 - 02:55Report Abuse
மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து வழக்கமான நடைமுறைகள் தொடர வேண்டும். 0
0
Reply
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement