கால்பந்து: பைனலில் இந்தியா
கோவா: தெற்காசிய கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி.
பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 8வது சீசன் கோவாவில் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், நேபாளம், இலங்கை, பூடான், மாலத்தீவு என 6 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
இத்தொடரில் 5 கோப்பை வென்ற இந்திய அணி 'பி' பிரிவில் மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்தியது. 2 வெற்றியுடன் பட்டியலில் முதலிடம் பெற்று, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் இந்திய அணி, பூடானை எதிர் கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் போட்டியின் 58 வது நிமிடத்தில் இந்தியாவின் சன்பிதா ஒரு கோல் அடித்து, கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்கதேசம் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.