ராஜ்யசபா தேர்தல்: காங்., சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டி

14

புதுடில்லி: தவெக ஒதுக்கிய ராஜ்யசபா சீட்டில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளார். இதனை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.


அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியான சிவி சண்முகம், சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தவெக எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த ராஜ்யசீட்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து அந்த சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.


இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதன்படி
கர்நாடகாவில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா, மன்சூர் அலிகான்,

மபியில் இருந்து மீனாட்சி நடராஜன்

ராஜஸ்தானில் இருந்து நீரஜ் தங்கி

ஜார்க்கண்டில் இருந்து பிரணவ் ஜா ஆகியோர் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Advertisement