அமெரிக்காவில் அசத்துவாரா மெஸ்ஸி: உலக கோப்பை கால்பந்தில் எதிர்பார்ப்பு
பியுனஸ் ஏர்ஸ்: உலக கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி மீண்டும் கோப்பை வென்று சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் (ஜூன் 11 - ஜூலை 19) நடக்கவுள்ளது. இதில், 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினா அணி, 'ஜே' பிரிவில் அல்ஜீரியா (ஜூன் 16), ஆஸ்திரியா (ஜூன் 22), ஜோர்டான் (ஜூன் 27) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
துரத்தும் காயம்: இம்முறை மீண்டும் கோப்பை வெல்ல திட்டமிட்டுள்ள அர்ஜென்டினா அணிக்கு காயம் பெரிய தொல்லையாக உள்ளது. அர்ஜென்டினா அணியில் இடம் பெற்றுள்ள பலர், காயத்தால் 'பிட்னஸ்' இல்லாமல் தவிக்கின்றனர். மெஸ்ஸி (தொடை பின்பகுதி), கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் (வலது கை மோதிர விரல்), கிறிஸ்டியன் ரோமிரோ (முழங்கால்) உள்ளிட்டோர் காயத்தில் இருந்து மீண்ட போதும், போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெற வேண்டும்.
ஓய்வு எப்போது: தற்போது 39 வயதாகும் மெஸ்ஸிக்கு, இத்தொடர் கடைசி உலக கோப்பையைாக அமையலாம். இத்தொடருக்கு பின் இவர், சர்வதேச அரங்கில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மெஸ்ஸி கூறுகையில், ''எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். என்னால் இனி விளையாடவே முடியாது என்ற நிலை வரும் வரை, தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பேன். எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி பெறவே விரும்புவேன். 'வீடியோ கேம்' விளையாடும் போது கூட எனது குழந்தைகளை வெற்றி பெறவிடுவதில்லை. இது தான் எனது இயல்பு. நான் எட்டிய அனைத்து சாதனைகளுக்கும் இதுவே காரணம்,'' என்றார்.
32 ஆண்டுக்குப் பின்...
கடந்த 1994ல் அமெரிக்காவில் நடந்த 15வது உலக கோப்பை தொடரில், மாரடோனா தலைமையில் அர்ஜென்டினா களமிறங்கியது. உடல் எடையை குறைக்க ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட, தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார் மாரடோனா. இவர் இல்லாமல் தடுமாறிய அர்ஜென்டினா அணி, 'ரவுண்டு-16' போட்டியில் தோல்வியடைந்தது. 32 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அமெரிக்க மண்ணில் களமிறங்குகிறது அர்ஜென்டினா. இம்முறை மாரடோனாவின் கால்பந்து வாரிசான மெஸ்ஸி கோப்பை வென்று தர காத்திருக்கிறார்.
வரலாறு படைக்குமா
உலக கோப்பை கால்பந்து அரங்கில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் அணிகள், பெரும்பாலும் மோசமாக செயல்படுகின்றன. 1998ல் கோப்பை வென்ற பிரான்ஸ், 2002ல் லீக் சுற்றுடன் திரும்பியது. இதேபோல 2010ல் இத்தாலி, 2014ல் ஸ்பெயின், 2018ல் ஜெர்மனி அணிகள் விரைவில் வெளியேறின.
இருப்பினும், 2018ல் கோப்பை வென்ற பிரான்ஸ், 2022ல் பைனல் வரை சென்றது. இம்முறை அர்ஜென்டினாவும் பைனலுக்கு முன்னேறி சாதித்தால், உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரு முறை சாம்பியன் ஆன, 3வது அணி என வரலாறு படைக்கலாம். முன்னதாக இத்தாலி (1934, 1938), பிரேசில் (1958, 1962) அடுத்தடுத்து அசத்தியுள்ளன.
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி