தேய்பிறை பஞ்சமி பூஜை
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. முன்னோர்கள் சாபம் நீங்கவும், பில்லி, சூனியம் உள்ளிட்டவைகளின் பாதிப்புகள் அகலவும், பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தலமாக வராகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவர் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள அம்மி கல்லில் ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளால் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement