புதுவை தமிழ்சங்க ஆட்சிக்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுவை தமிழ்சங்க ஆட்சிக்குழு கூட்டம் தமிழ்சங்கத்தில் நடந்தது.
சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமிக்கு, புதுவை தமிழ்சங்கம் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறது. புதுச்சேரியில் மும்மொழி கல்வியை கைவிட்டு, இருமொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும். அரசு விழாக்காளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.
நியமன எம்.எல்.ஏ. ,க்களில் தமிழ் அறிஞர் ஒருவரை நியிமக்க வேண்டும். புதுவை தமிழ்சங்கம் கூட்டம் வரும் 13ம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரத்தில் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement