அ.தி.மு.க.,வில் சண்முகம் ஆதரவாளர்கள் பதவி பறிப்பு

1

திண்டிவனம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் ஒரு பிரிவினர் செயல்பட்டபோது, சண்முகம் வகித்து வந்த விழுப்புரம் மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, திண்டிவனத்தில், சண்முகம் வீட்டு அருகே இருந்த பழனிசாமியின் படத்தின் மீது தார் பூசி, அவமரியாதை செய்யப்பட்டது.

இந்நிலையில், பழனிசாமி படத்திற்கு அவமரியாதை செய்த, விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் கோகுல்ராஜ், இணைச் செயலர் பாலாஜி, மாவட்ட ஜெ., பேரவை துணைச்செயலர் சக்தி பெரியதம்பி, கண்டமங்கலம் ஒன்றிய ஐ.டி., பிரிவு செயலர் சேதுபதி ஆகிய நான்கு பேரின் கட்சிப் பதவிகளை பறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement