மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இன்று அதிகாலை மீண்டும் வெடித்த வன்முறையில் கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் அதிகாலை சுமார் 4 மணியளவில் நடந்துள்ளது. அப்பகுதியில் இருதரப்பு துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், காங்போக்பி மாவட்டத்தின் லோய்போல் குல்லென் கிராமத்தைச் சேர்ந்த லெட்கோங்கம், அவரது மனைவி டின்மேரி மற்றும் ஜாங்மின்லால் ஆகியோர் குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர்.

இந்த வன்முறையின் போது குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான பல வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த மோதலுக்கான காரணம் குறித்தோ, மோதலில் ஈடுட்டவர்கள் குறித்தோ அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement