பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு கேட்டு யாரும் எங்களை அணுகவில்லை. ஆனால், நாங்கள் ஆதரவு தெரிவித்ததாக காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிக பிரசங்கித்தினம் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாகி உள்ள ராஜ்யசபா எம்பி பதவிக்கு வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.
நன்றி
இது தொடர்பாக பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பார்லிமென்டில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன். எனத் தெரிவித்து இருந்தார்.
@twitter@https://x.com/pravchak/status/2062709615381627109twitter
தவறு
இது தொடர்பாக தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதிய கூட்டணியின் சார்பில் தான் ராஜ்யசபா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் மார்க்சிஸ்ட் பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
@twitter@https://x.com/Shanmugamcpim/status/2062764054662516874twitter
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை அதிக பிரசங்கித்தனம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் திருவாய், டெய்லி ஒன்று பேசும், காரணம் வடிவேலு திரைப்பட காமெடி போல்,, அது வேற,,,, இது வேற என்று தெரிந்த ஒன்று தான்
நீ சோறு சாப்பிட்ட வனா இருந்த
ஆதரவ: வாபஸ் வாங்கு
அதுக்கு துப்பில்ல .........?
இதுக்கு முன்னால - திமுக & அதிமுக காட்சிகள் போட்ட பிச்சையில் ராஜ்யசபைக்கு தேர்வு பெற்றது சீமான் வீட்டுப்பிள்ளை சிதம்பரம் உட்பட - இப்போது புதிய கட்சி தவெக விடம் பிச்சை எடுத்து இந்த சீட் -
தவெக திமுக காங்கிரஸ் எந்தக் கட்சிக்கும் இவர்கள் ஆதரவு தேவையில்லை. எங்கும் இல்லாமல் போனாலும் இவர்கள் பேச்சில் இவர்கள் தயவில் தான் ஆட்சிப் போன்றப் பேச்சு
இனி காங்கிரஸ் வெற்றி பெற்று பாராளுமன்றம் அல்லது மாநிலங்கள் அவைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒன்று சிறுபான்மையின மக்கள் அதிகமாக உள்ள தொகுதியில் நின்று வெல்ல வேண்டும். அல்லது கூட்டணி கட்சிகளின் தயவில் நின்று வெற்றி பெற வேண்டும். இது தான் நாடாண்ட பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியின் நிலை.
தி மு க பெட்டி கொடுத்தது. தி மு க வின் பேச்சை கேட்டோம்.
அய்யா உண்டியல்ஸ் உங்க ஆதரவு இல்லாமல் வெற்றி கிட்டும் நீங்க போய் உண்டியலை கவணிகவும்
திமுக 10 கோடி கொடுத்து வாங்கி கூட்டணியில இணைந்தது. பிரவீண் ஓசியில் ஆதரவை எதிர்பார்க்கலாமா?. பணவீக்கத்தை கணக்கு பண்ணி கொஞ்சம் மேலே போட்டுக் கொடுக்கணும்.
இவனுகளை துரத்தி அடிக்க வேண்டும். யாருக்கு வேண்டும் இவனுக ஆதரவும். இந்த வெட்கம் மானம் சூடு சுரணை ரோசம் இதெல்லாம் சோற்றில் உப்பு சேர்த்து சாப்பிடும் மக்களுக்கு. உண்டி குலுக்கி களுக்கு அல்ல.
காமாரேட்.. சுவீட் பாக்சு பின்னாலேயே வரும். கவலைபட வேண்டாம்.