தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
நமது நிருபர்
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.இந்த சூழலில் சமூகவலைதளத்தில் நேரலையில் அடுத்தக் கட்ட திட்டம் குறித்து பேசியதாவது: நான் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் பாஜவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.என்னுடைய பாதை வேறு; வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும்.
அழைப்பு
தமிழர் பண்பு என்பதால் தலைமையை சந்திக்க டில்லி வந்தேன். நான் பாஜவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது, தமிழகத்துக்கு எது நல்லது; ரஜினிகாந்த்துக்கு எது நல்லது; அண்ணாமலைக்கு எது நல்லது என்ற மூன்று விஷயங்கள்தான் என் கண் முன்பாக இருந்தன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு நல்லது.
ஆனால், கோவிட் பெருந்தொற்று காலமாக இருந்ததால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது. நான் பாஜவில் இணைவதாக பி.எல். சந்தோஷ் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால் அதை மீறக்கூடாது என நான் கருதினேன். இதனால், என்னை மன்னித்துவிடுங்கள்; என்னால் வர முடியாது என்று ரஜினிகாந்த் இடம் கூறிவிட்டு, மறுநாள் பாஜவில் இணைந்தேன். சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். வேறு காரணம் இல்லை.
தமிழர்களின் உணர்வுகளை விட்டுக்கொடுத்தது இல்லை. தனிப்பட்ட ஒரு கட்சிக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அனைத்து தேர்தலிலும் பாஜ தனித்து போட்டியிட விரும்பினேன். தமிழகத்தின் அடையாளம் பாஜவில் இருக்க வேண்டும் என்று சொல்லியே உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவற்றை சந்திக்க அறிவுறுத்தினேன். மீத்தேன், நிலக்கரி சுரங்கம், மேகதாது உள்ளிட்ட அனைத்திலும் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்தது கிடையாது.
மோடி மீது பெருமை வைத்துள்ள மனிதன் நான், அவருக்கு நான் பிரச்னையாக இருக்கக்கூடாது என கருதுகிறேன். ஓராண்டாகவே எனது கருத்து வேறுபாட்டை பாஜ தலைவர்களிடம் சொல்லி வருகின்றேன். தேர்தல் பணி முடித்துவிட்டு செல்லுமாறு கட்சி அறிவுறுத்தியதால் தான் இவ்வளவு நாள் தொடர்ந்தேன்.
மிகுந்த மரியாதை
மோடி நம்முடைய பிரதமர். அதில் எந்த மாற்றமும் இல்லை. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பிரச்னை, பிரச்சனை என தொடர்ந்து அவரை என்னால் தொந்தரவு செய்ய முடியாது. சின்ன, சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தன. நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என முன்கூட்டியே கட்சி தலைமை நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். பாஜ தலைமையிடம் கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து சொல்லி வருகிறேன். டிசம்பர் மாதமே கட்சியை விட்டு வெளியே செல்கிறேன் என்பதை தெரிவித்திருந்தேன். தேர்தலை முடித்து விட்டு செல்லுங்கள் என கூறினார்கள். நான் மிக பொறுமையாக இருந்தேன்.
பெருமைமிகு இந்தியன்
தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன். பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழன் என்பதே எனது அடையாளம். நீங்கள் தமிழனா அல்லது இந்தியனா என்று கூட வடமாநிலத்தவர்கள் என்னைக் கேட்டனர். பாஜ தலைமையுடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதனால், கட்சியில் இருந்து விலகும் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய பாதை, புதிய இயக்கம்!
புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. நிரந்தர எம்எல்ஏ., நிரந்தர அமைச்சர் என்பதை உடைக்க வேண்டும். பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே நிரந்தரம் இல்லை.
கோவையில் 'சென்டர் பார் எதிக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்' என்ற மையத்தை, அரசியல் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்குகிறோம். கிராமங்கள் குறித்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எவ்வளவோ சொல்லி இருக்கிறார் . அவர் மறக்க முடியாதவர். அவரது கருத்தியல் முக்கியமானது. தேசிய மனிதராக, பெருமை மிகுந்த தலைவராக வாழ்ந்து மறைந்துள்ளார். வாழ்வியல் தலைவராக கலாம் அய்யா வாழ்ந்து வந்தார்.
கட்சியாக மாறுவோம்
வளர்ந்த பாரதம் எனும் கனவோடு அரசியல் இயக்கம் தொடங்கி உள்ளேன். சாமானிய மக்களுக்காக அரசியலை முன்னெடுக்க உள்ளேன். அரசியல் என்பது ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. நிரந்தர எம்எல்ஏ., நிரந்தர அமைச்சர் என்பதை உடைக்க வேண்டும். பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே நிரந்தரம் இல்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாருக்கும் நாம் போட்டியில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கும் வேட்பாளர்களை தயார்ப்படுத்துவோம். சமூக ஊடகங்களில் நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், மேலும் ஒரு புதிய கட்சி தேவை
என்பதை நான் உணர்ந்துள்ளேன். என்னுடைய இயக்கம் கட்சியாக மாறும் நாளில்
அனைத்தையும் அறிவிப்பேன். தற்போது தொடங்கியுள்ள இயக்கத்தில் நிறைய பேரை
சேர்க்க வேண்டும். இந்த இயக்கம் கட்சியாக மாறும். ஆனந்தமாக அரசியல்
இயக்கத்தை தொடங்குகிறேன். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்.பி,
எம்.எல்.ஏ. கிடையாது. இணைபவர்களுக்கு அரசியல் தொடர்பான பயிற்சி தரப்படும், அமைப்பை உருவாக்கி கட்சியாக மாறுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை தொடங்கிய இயக்கம்
இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை ஜரூராக நடக்கிறது. தற்போது வரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்
https://wetheleader.org/
@block_P@
புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள அண்ணாமலையின் சமூக வலைதள முகப்பு பக்கம் மாற்றப்பட்டுள்ளது. block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
புதிய இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சீமான் இரண்டு அவ்வ வுதான தோற மாட்டார்
குஷ்பு ஆரம்பித்திருந்தா இந்நேரம் 10 லட்சம், கயாடு லோஹரா இருந்தா ஒரு கோடிய தாண்டியிருக்கும் . என் இனிய டுமீல் மக்களே.
அருவருப்பான கருத்து ....
இனியாவது தமிழர்கள் நன்கு சிந்தித்து - அண்ணாமலை என்ற அருமையான தலைவரை CM ஆக்கவேண்டும்
ஒவ்வொரு தமிழனும் வோட்டளிக்குமுன் தீர சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய விஷயங்கள்:
1. கட்சித்தலைவன் நாட்டுப்பற்று உள்ளவரா ?
2. கட்சித்தலைவர் கறைபடியாத கை கொண்டவரா?
3. கட்சித்தலைவர் கலந்து ஆலோசித்து பின் சுயமாக முடிவெடுக்கும் சக்தி கொண்டவரா?
4. கட்சித்தலைவர் சனாதனத்துக்கு மரியாதையை கொடுத்து நம் பாரம்பரியத்தை காப்பாற்றுவாரா ?
மேற்கொண்ட எல்லா POINTS லும் 100 க்கு 100 பெரும் ஒரே தலைவர் அண்ணாமலை அவர்கள் தான்.
தமிழா விழித்துக்கொள்
அண்ணாமலை ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.
நீ எப்படி டொராண்டோவில் குப்பை கொட்டுகிறாய்...அதை சரியாக செய்யடா அறிவிலி
Best wishes. Bharat First, Nation First. Great combo to have Hon PM Modi at Centre and Mr Annamalai at State. We pray for such potential wonderful combo. All our best wishes Mr Annamalai. Ram
விருமாண்டிக்கு மீண்டும் பயம் வந்துச்சோ
அண்ணாமலை பா.ஜ கட்சியில் சேரும் போதே அவருடைய கண்டிசனை சொல்லி சேராமல் இருந்திருக்கலாமே? பா.ஜ.கட்சியால் தன்னை வளர்த்துக் கொண்டு இப்போது ஒரு காரணத்தை சொல்லி தனிக்கட்சி ஆரம்பித்து பா.ஜ உறுப்பினர்களை தன் பக்கம் இழுப்பது எவ் வகையில் நியாயம்?
பாஜக ஒரு அருமையான தலைவரை இழந்து விட்டது.
6.45 pm இதுவரை 7,51,248 பேர் இணைந்துள்ளனர்
தமிழ்நாட்டு திராவிட கட்சிகளின் பலமே ஊழல்தான். அரசு அதிகாரிகள் முதல் காண்ட்ராக்ட் வரை நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடித்து கொள், ஆனால் எனக்கு வேண்டியதை மாத மாதம் கப்பம் கட்டு என்பது தான்.
இந்த ஊழல் கூட்டம் இந்த வெற்றி பார்முலாவை 70 ஆண்டுகள் நடைமுறை படுத்தி உள்ளது. இதோடு சேர்ந்து அரசியல் சதி வேறு. 40 தொகுதிகள் வெற்றி பெரும் கட்சிகளை 4 தொகுதியாக அரசியல் சதி மூலம் சுருக்கி விடுவது. இதனால் தான் அதிகார பகிர்வு, அமைச்சர் முதல் - உள்ளாட்சி தலைவர் வரை என்பது 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.
இப்போது ஆட்சியில் உள்ள கட்சி கூட, ஒரு கூட்டணி அமைத்து போட்டி இட்டு இருந்தால், 20 தொகுதிக்கு மேல் வெற்றி பெற முடியாத படி உள்ளடி வேலை செய்து இருப்பார்கள். ஆளும் கட்சியின் வெற்றி என்பது விஜயின் தனிப்பட்ட போட்டி என்பதால் தான் நடந்தது.
இதே சதியில் தான் பிஜேபி வீழ்ந்தது. அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ள தொகுதிகள் ஒதுக்காதது, உள்ளடி வேலை பார்த்தது, அண்ணாமலை போன்றவர்களை ஒரே சமூகத்தில் எப்படி இரண்டு கத்தி என்ற அடிப்படையிலும் சதி செய்து பலம் இல்லாமல் செய்தது. தனக்கு உரிய நபர்களை மாநில தலைவராக நியமித்தது போல இன்னும் பல.
தேர்தலில் போட்டி இட்டவர்கள், வாங்கிய தேர்தல் நிதியில் ஒரு பணத்தை செலவு செய்து, மீதம் ஒரு பெரிய பணத்தை அமுக்கியது தான் இந்த தேர்தலில் பிஜேபி வேட்பாளர்களின் வெற்றி கதை. தனக்கு பிஜேபி யில் இடம் இல்லை என்பதை புரிந்து கொண்டு தான், அண்ணாமலையில் வெளியேற்றம் நடந்து உள்ளது.
அண்ணாமலையின் பேச்சை பார்க்கும் போது, அவர் ஒரு மத சார்பு அற்ற கட்சியை அமைக்க போவதாக தெரிகிறது. ஆனால் திராவிட கட்சிகள் அவரது பழைய முகத்தை - அதாவது அவர் பிஜேபி, RSS ஏஜென்ட் என்பதை திரும்ப திரும்ப பிரச்சாரம் செய்து அவரை வளர விடாமல் பார்த்து கொள்வார்கள்.