குன்னுார் நகராட்சி மார்க்கெட் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஆய்வு

குன்னுார்: குன்னுார் மார்க்கெட் கடைகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நேற்று ஆய்வு செய்தார்.

குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை அகற்றி, புதிய கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடை வைத்துள்ள வியாபாரிகள் தரப்பில், ‘கடைகளை கட்டி முடிக்கும் வரை, வியாபாரிகள் பாதிக்காத வகையில், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் நேற்று மாலை, மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம், அலுவலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் வியாபாரிகள் உடன் இருந்தனர்.

அதிகாரிகள் கூறுகையில்,‘ இங்குள்ள, 736 கடைகளில், வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நான்கு கட்டமாக கட்டடங்கள் கட்டப்படும். முதற்கட்டமாக, 259 கடைகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை வியாபாரிகளுக்கு, உழவர் சந்தையில் கடைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த கோரிக்கைகளை, வியாயாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் மனுக்களாக கொடுத்தால், மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு எடுத்து செல்லப்படும்,’ என்றனர்.

Advertisement