சிறைகாவலரை தாக்கிய கைதிகள் மீது வழக்கு
கோவை, ஜூன் 6–
கோவை மத்திய சிறையில், சிறைகாவலரை தாக்கிய கைதிகள் இருவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை பிரிவுகளின் கீழ், 2500 கைதிகள் உள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொலை வழக்கில் கைதான இரண்டு பேர், சிறைகாவலர் வெள்ளைபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த காவலர் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகாராக அளிக்கப்பட்டது. இதன் படி, அரியலுார் ஜெயமணிக்குமார், 31 திருவாரூர் ஆனந்த், 28 ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிறைப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘ இக்கைதிகள் கொலைக்குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். இவர்களை வேறு சிறைக்கு மாற்றவுள்ளோம், ’ என்றனர்.