உயர்கல்விக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: 2025–26 கல்வியாண்டில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்வி செல்வதை உறுதி செய்யும் நோக்கில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்கள், அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரிகள், மருத்துவம், வேளாண், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் தொடர்பான சேர்க்கை விவரங்களை கேட்டறியலாம். இவை தவிர எஸ்.சி., விடுதி வசதிகள், வங்கிக் கல்விக் கடன்கள், கல்லுாரிச் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பத் தேதிகள், சேர்க்கை நடைமுறைகள் குறித்த துல்லியமான தகவல்களை பெறலாம். 75985 10114, 96988 10699, 99769 03873 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொருளாதாரச் சூழ்நிலை அல்லது வழிகாட்டுதல் இல்லாமல் காரணமாக உயர்கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது, என்றார்.