கடுகுச்சந்தை உயர்நிலைப் பள்ளி அருகே ஆக்கிரமிப்பு கடைகள்

கடலாடி: கடலாடி அருகே கடுகுச்சந்தையில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே இரண்டு ஆண்டுகளில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் வந்துள்ளதால் மாணவர்கள் மற்றும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

ராமநாதபுரம் –சாயல்குடி செல்லும் பிரதான கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியில் கடுகுச்சந்தை அமைந்துள்ளது. இந்நிலையில் கடுகுசந்தை அரசு உயர்நிலைப் பள்ளியின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள் பல முளைத்துள்ளன. இதனால் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

அடிக்கடி விபத்து அபாயம் உள்ளது. எனவே பள்ளியின் முன்புறம் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வருவாய்த்துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement