மாநகராட்சி நகரமைப்புஅலுவலர் மாற்றம்

மதுரை: மதுரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் (சி.டி.பி.ஓ.,) மாலதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் தஞ்சாவூர் மாநகராட்சி சி.டி.பி.ஓ., முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 2ல் நடந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் த.வெ.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் நகரமைப்பு செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். குறிப்பாக பல மாதங்களாக கட்டடங்களுக்கான பிளான் அப்ரூவல் பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் விளாங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு 45 நிமிடங்களில் கட்டட அனுமதி அளிக்கப்பட்ட பின்னணி என்ன என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் மாலதி உட்பட நேற்று 12 மாநகராட்சிகளின் சி.டி.பி.ஓ., மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement