33 சவரன் நகை திருட்டு போலி நிருபர்கள் கைது

பொங்கலுார்: பொங்கலுார் அடுத்த நொச்சிபாளையம் ஸ்ரீ சாய் சஷ்டி நகரில் சாஜன் தாமஸ், 54 என்பவரது வீட்டில், 33 சவரன் நகை மற்றும், 1.5 லட்சம் ரூபாய் பணம் கடந்த மே, 26ல் திருடு போனது.

இவ்வழக்கில் தொடர்புடைய வேதாரண்யம் தலைஞா யிறுமணிமாறன், 39, அம்பாசமுத்திரம் கள்ளக்குறிச்சி முத்துப்பாண்டி, 32, சங்கர், 44 ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். 29 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement