விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மாணவ, மாணவியர் அசத்தல்
திருப்பூர்: கோவா மாநிலத்தில் கடந்த மாதம் 28-ல் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில், 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் திருப்பூர் விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் பள்ளி மாணவி கனிஷ்கா கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
மூணாறில் நடைபெற்ற மாநில அளவிலானரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற இப்பள்ளியின் மற்றொரு மாணவர் குர்ஷித் தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சர்வதேச மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த இவ்விரு மாணவமணிகளையும் பள்ளியின் தலைவர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் நேரில் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
-
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
Advertisement
Advertisement