தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை
சென்னை: சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கடந்த ஏப்., 29ல், எப்போதும் இல்லாத அளவாக, 21,307 மெகா வாட்டாக அதிகரித்தது. வழக்கமாக ஜூனில் வெயில் சற்று குறையும். ஆனால், இம்மாதத்தில் வெயில் குறையாததால், வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகம் உள்ளது.
அதற்கு ஏற்ப, மின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், பல மாவட்டங்களில், இரண்டு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் வீடுகளில் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக நுாற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேலாக அறிவிக்கப்படாத மின் தடை, ஒவ்வொரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக இரண்டு மணி நேரமும், குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்படுகிறது.
இதற்கு, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் இல்லை என்பதே காரணம். ஒரு பகுதியில், 1400 மெகா வாட் வரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் தயாராக இருந்தும், அவைகளுக்கு துணை மின் நிலையங்களுடன் இணைப்பு வழங்காததால், மின் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; இதுவே, மின் தடைக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
இரவில் ஏற்படும் மின் தடைக்கு சூர்ய ஒளி மின்சாரம் எப்படி கை கொடுக்கும்? இந்த சூர்ய ஒளி மின்சார உற்பத்தியாளர்கள் அனைவரும், பகலில் உற்பத்தி செய்து, மின்சாரத்தை சேகரித்து, மாலை முதல், இரவு தாண்டி, மறு நாள் காலை வரை சேகரித்த மின்சாரத்தை திட்டமிட்டு விநியோகிக்க பேட்டரி ஸ்டோரேஜ் வைத்துள்ளனரா? பிரச்சனையை தீர ஆராயாமல், அபாண்டமாக தளபதி விஜய் அவர்களின் அரசின் மீது வீண் பழி சுமத்தாதீர்கள்.
மின் தட்டுப்பாடு வேறு, மின் தடை வேறு.
மின் தடை ஏற்பட, மின் தட்டுப்பாடு பட்டும் காரணமல்ல. திடீரென கோடை வெயில் காலத்தில் மாலை பொழுதில் சூறாவளி காற்று வீசினால், மின் பகிர்மானம் செய்யும் இடத்தில மின் கம்பங்கள் சாய்ந்தால், மின் பகிர்மானம் செய்ய முடியாது. அது மின் பற்றாக்குறை அல்ல, மின் தட்டுப்பாடு. இத்தனை வருடங்களாக பராமரிப்பு செய்யாததால் விளைவே இது. தளபதியின் அரசு, பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான பலன் தெரிகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் இந்த முன்னேற்றத்தை பற்றியே மன நிறைவுடன் சொல்கின்றனர், இந்த குறுகிய 4 வாரத்திற்குள் எப்படி சாத்தியமாயிற்று என்று ஆனந்தத்துடன் கேட்கின்றனர். மக்களிடையே எழுச்சியை காண முடிகிறது.
அதிமுகவிலிருந்து செந்தில் KKSSR ரகுபதி மனோஜ் ஓபிஎஸ் சேகர் பாபு முத்துசாமி ஜெகத்ரக்ஷகன் போன்ற முன்னாள் முந்திரிகள் திமுகவில் ஐக்கியமானார்கள் .. இப்போ திமுக தலைவரே ஓய்வெடுக்கிறார் கட்சி கலகலத்து நிக்கிறது . இந்த நிலைமை தவெகாவுக்கு வரும்
This power cut problem can be easily managed by tapping solar power available in plenty.In Switzerland they are creating power storage facilities by building huge electrolyte tanks under the ocean.TN has a long sea coast and the above proposal can be tried.
முதல்வர் உறங்கி கொண்டு இருக்கிறார் தயவு செய்து தொந்தரவு செய்யாதே
கரண்ட் பில் மிச்சம்.
இலவசம் என்றால் பிரச்சினை தான். அதுவும் மாஸாக ஆளும் மாநிலங்களில் பிரச்சினை கிடையாது. மத்திய அரசு உதவி செய்கிறது.
மேற்கு வங்காளம் தேர்தல் முடிந்த உடனேயே மாதம் 3000 ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாடு 5 ஆண்டு ஆட்சி கடினம் தான்.
அரசியல் கட்சிகள் ஓட்டுவாங்கும் ஆசையில் இலவசங்களைக் கொடுப்பது மக்களின் வரிப்பணத்தில்தான் ...
முந்தைய அரசுகள் செய்தது போல இந்த அரசும் இலவசங்களை அள்ளி விடுகிறது. இதில் திராவிடமும் புதிய அரசும் ஒன்று தான். எந்த மாற்றமும் இல்லை. அதனால் இதை மாற்று அரசு, புதுமையான அரசு என்று கூறவே முடியாது. தேவையில்லாத இலவசங்களை நிறுத்தினாலே விரைவிலேயே தமிழகத்தின் கடன் தீர்ந்து விடும். முக்கியமாக போக்குவரத்து மற்றும் மின்சாரம். இரண்டிலும் தேவையான அளவுக்கு மேலே இலவசம் வழங்கப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். தவிரவும் நாட்டுக்குத் தேவையான மின்சாரம், சாலை, குடிநீர், சட்டம் ஒழுங்கு திட்டங்களில் அரசு தீவிர கவனம் செலுத்தியே ஆக வேண்டும். வளைகுடா நாடுகள் எண்ணை வளத்தில் கொழிக்கின்றன. ஆனால் அவர்கள் தங்கள் மக்களுக்கு தேவையில்லாத இலவசம் எதுவும் வழங்குவதில்லை. மக்களுக்குத் தேவையான சாலை, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு, சுகாதாரம் வழங்குகின்றனர். அதன் மூலம் நாடு முன்னேறுகிறது. மக்களுக்கு பலவித வேலை வாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கு வருகிறார்கள். இந்தியாவிலும் இலவசங்களை நிறுத்தி விட்டு அவசிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
மாஸாக ஆளும் மாநிலங்கள் ? தமிழ்நாட்டில் தங்கு தடையில்லாமல் மது கிடைக்கிறதே ..பாட்டிலுக்கு பத்து ரூபாய் பிரச்சனைக்கும் அவசர தீர்வு காண முதல்வர் தலைமயில் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது .
சில்லறை விற்பனை விலைக்குள் நிர்வாக சிலவுகள், ஏற்றி இறக்கும் கூலி அத்தனையும் அடங்கும். தனியார் விற்கும் எந்த பொருளுக்கும் நிர்வாக சிலவுக்கு என்று அதிக துகை வாங்குவது இல்லை.
ஒன்னுமே தெரியாத அரசாக இருக்கிறதே. சினிமா வசனங்கள்ளாம் என்ன ஆச்சு??
எங்களுக்கு இலவச மின்சாரமே முக்கியம் ..... டுமீலன்ஸ் .......
அமைச்சர் இப்போ டிஸ்க் தேடும் பணியில் இங்கு நாங்கள் சர்வர் என்று தான் ஒரு இடத்தில CENTRALISED அங்கு டிஸ்க் , ஒரு வேலை MINSITER டிஸ்க் இல் கரண்ட் சேமித்து வைத்து இருக்கிறாரோ?
இதில் மேலும் துயரம் என்னவெனில் பெரும்பாலான இடங்களில் வோல்டேஜ் பெரிதும் குறைவாக உள்ளது. இதனால் பெரிதும் ஃபேன் ஏசி முதலான உபகரணங்கள் வேலை செய்வதில்லை. என் எதிர் வீட்டில் கை குழந்தை தூங்காமல் அழுது கொண்டே இருந்ததைக்கண்டு அதன் தாத்தா கார் ஏசி போட்டு காரில் உட்கார்ந்து குழந்தையை துங்கவைக்க முயற்சித்தார்.