தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
நமது சிறப்பு நிருபர்
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, டில்லியில் கடந்த 2ம் தேதி, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்திருந்தார். அதை, அக்கட்சி தலைமை ஏற்றுள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை, கட்சி தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அளித்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும், அரசியல் நடத்தப்படும் முறையை மேம்படுத்தவும், ஆறு ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தேன்.
அதை விட முக்கியமாக, அரசியல் என்பது மேல்மட்டத்தினருக்கும், சிலருக்கும் மட்டுமே உரிய பாதை அல்ல; சாதாரண மக்களுக்குமான பாதை என்பதை காட்ட விரும்பினேன். மிக இளம் வயதிலும், அனுபவம் குறைந்த நிலையிலும், என் மீது நம்பிக்கை வைத்து, முக்கிய பொறுப்புகளையும், தலைமை பதவிகளையும் வழங்கிய பா.ஜ., தலைவர்களுக்கு நன்றி.
தேசிய கட்சிகள், தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் பேசவில்லை. இந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்தேன். உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் வந்த பல தடைகள், இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி, அதில் ஓரளவு வெற்றியையும் கண்டேன். கட்சியின் மூத்த தலைமையுடன் நடந்த கலந்துரையாடல்களுக்கு பின், தமிழகம் சார்ந்த விஷயங்களில் எங்களது பார்வைகள் ஒன்றுக்கொன்று ஒருமித்து போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
நீண்ட சிந்தனைக்கு பின், கட்சியில் இருந்து விலகி, நான் அரசியலுக்கு வந்த உண்மையான நோக்கத்தை மறுபரிசீலனை செய்து, எதிர்காலத்தில் வாழ்க்கை என்னை எங்கு அழைத்து செல்கிறதோ, அந்த பாதையில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நம்புகிறேன். எனவே, கட்சியில் நான் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனே என்னை விடுவிக்குமாறும், பா.ஜ., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, நான் அளிக்கும் ராஜினாமாவை உடனே ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இவ்வளவு நாட்கள் உனக்கு புரியலையா தமிழக மக்களுக்கு புரிந்துதான் இருந்தது நீங்கதான் திடீர்னு பல்டி அடிக்கிற .
தேசீய கட்சிகள் தமிழக மக்களுக்கு புரியும்படி பேச வில்லை என்று குற்றம் சொல்லும் அண்ணாமலை அதன் காரணங்களை ஏன் மறைத்தார்? அவர்கள் சொல்வதை புரிய வைக்கத்தானே தமிழக நிர்வாகிகள். பாஜக தலைமை தயவில் தன்னை உயர்த்திக்கொண்டு மோதி முதுகிலேயே குத்தி விட்டு வந்திருக்கிறார். ஹிந்தி தெரியாது போடா என்று சொன்னால் தமிழனுக்கு அவர்கள் பேசுவது புரியாதுதான். ஆங்கிலம் பேசினாலும் புரியாது. தமிழக பாஜக நால்வர் அணியும் அண்ணாமலையுமே பாஜக எடுபடாததறெகு காரணம். திமுக உண்மையில் சீவாஜி ராவ் என்னும் குள்ள நரியை வைத்து அண்ணாமலையை பிடித்து தமிழகத்தில் பாஜகவை வீழ்த்தி விட்டார்கள். பாஜகவில் இருக்கும் மற்ற த்ரோகிகளையும் கண்டுபிடித்து வெளியேற்றினால் தமிழக பாஜக உருப்படும். ஒன்று கவனித்தீர்களா அண்ணாமலை திமுக போலவே பேச ஆரம்பித்திருக்கிறார்
நெத்தியடி. இனிமே புறநானுறு, திருக்குறள் யாராவது வாங்க. அண்ணாமலை யே பதிலடி குடுப்பாரு.
அண்ணாமலை தனி கட்சி தொடங்கியது சரியாக படவில்லை.
அண்ணாமலைதான் பிஜேபி கட்சியை விட்டே வந்துவிட்டரே அப்புறமும் ஏன் இந்த வெறி பிடித்த கூட்டம் அவரை தூரத்துகிறது....... அண்ணாமலைக்கு பின்னால் நல்ல உள்ளங்கள் பல கோடி உள்ளன.
ஒரு எட்டு கோடி இருக்குமா..பரவாயில்லை நீங்களும் அவங்க மாதிரி பேசறீங்க...
70 ஆண்டுகளாக திராவிட பிரிவினைவாதம் பள்ளிகளிலும் ஊடகங்களிலும் திணிக்கப்பட்டு மக்களின் ஆழ்மனங்களில் விதைக்கப்பட்டுவிட்டதாம் ....அதை தடுக்க இங்குள்ள முன்னாள் ப ஜா க தலைவர்கள் இல கணேசன் உட்பட இவர்கள் என்ன செய்தார்களாம் ??.....இந்த ப ஜா க தலைவர்கள் இங்குள்ள திராவிட கட்சிகளுடன் நேரடி அல்லது மறைமுக கூட்டணி வைத்து அதனால் பலனடைந்தார்கள் ....தலைவர் பதவி காலாவதியானால் இவர்களுக்கு கவர்னர் பதவி ..திராவிடத்தை எதிர்த்து இவர்கள் ஒரு சிறு துரும்பையாவது அசைத்தார்களா ??....இவர்கள் எல்லாம் அண்ணாமலையை குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்குது .....
தமிழக மக்களின் சாபக்கேடு இது... தேசியத்திற்கு எதிரான சிந்தனை ஒன்றுபடும்போது, யாராவது ஒருவர் தனது பிரச்சனைக்காக அதை உடைத்துப்போட்டுவிடுவார்கள்...
அமிட்ஷா மற்றும் மோடியின் ஆசியோடுதான் தனி கட்சி ஆரம்பிக்கிறார் ...
நீங்க தான் கூட்டத்தில் கலந்து கொண்டு குறிப்பு எடுத்த நபர்.
இதுவரை தமிழக அரசியிலில் எந்த தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் யோசிக்காத - சாதிக்க நினைக்காத- சாதிக்க முடியாத பிரச்சனைகளையும் சவால்களையும் துணிச்சலாக எதிர் கொள்ள தன்னை தயார்படுத்தி கொண்டு புதிய பாதையில் வீர நடை போட்டு தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்ற நிணைக்கும் துடிப்பு மிக்க எழுச்சி தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் எடுக்கும் எல்லா அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளுக்கும் தமிழக மக்கள் துணை நிற்பார்கள்.
இவர் புஸ்ஸாகிப்போவார். இன்னொரு ரவுடி நடிகர் வேறு அண்ணனோட அரசியலில் குதிக்கப்போறாராம் "சிவாஜி ராவ் ஆசியோடு . நல்ல காலம். இன்னம் தல சொல்லல. தாங்கலடா சாமி. தமிழா என்று நீ த்ராவிடக்கூட்டத்திடமிருந்தும் சினிமா மாயையிலிருந்தும் விடுதலை பெற்று உன் சுய நினைவை பெருமையை மீட்கப்போகிறாய்