நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: கட்சி ஒரு சிறிய அமைப்பிலிருந்து தமிழகத்தின் முக்கிய சக்தியாக வளர்ந்தபோதே இந்தத் தேர்தல் வெற்றிக்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இது தற்செயலாக நடந்ததல்ல; இது எங்கள் தலைவரின் துணிச்சலான முயற்சி தான் காரணமாகும்.
இந்த வெற்றி இரண்டு முக்கியத் தூண்களைச் சார்ந்து அமைந்தது. எங்கள் தலைவர் விஜய்யின் வலிமையான தலைமை மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை தான் காரணம். கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தை இரண்டு வலுவான கட்சிகள் ஆட்சி செய்து வந்த நிலையில், ஒரு புதியவர் களத்தில் இறங்கி அந்தக் கட்சிகளை வீழ்த்தியுள்ளார்.
வலுவான ஆதரவு
விஜய் அரசியலில் நுழைவது என்ற துணிச்சலான முடிவை எடுத்தார். தமிழக வெற்றிக்கழகம் என்பது வெறும் ரசிகர் மன்றம் என்பதையும் தாண்டிய ஒரு அமைப்பு. தமிழக மக்கள் உண்மையான, அனைவருக்குமான ஒரு தலைவருக்காக காத்திருந்தனர்.
குறிப்பாக நகர்ப்புறங்களில் விஜய்க்கு வலுவான ஆதரவு இருப்பதை தமிழக வெற்றிக்கழகத்தின் உள் ஆய்வுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டியது. இது ஒரு உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி, ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி. கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் திமுக ஒருபோதும் தேர்தலில் வெற்றிபெற்றதில்லை.
பெரும்பான்மையை விட இடம் குறைவாக இருந்தாலும், இந்தத் தீர்ப்பே நாம் கற்பனை செய்யக்கூடிய மிகச் சிறந்த தீர்ப்பாகும். தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியை வெறும் இளைஞர் இயக்கத்தின் வெற்றியாக மட்டும் சுருக்கிவிட முடியாது. இது ஒரு குடும்பப் புரட்சி.
தமிழக மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து உழைத்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ வசம் இருக்கிறது. விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்தச் சம்பவம் விஜய்யை மிகவும் நிலைகுலையச் செய்தது.
செல்வாக்கு மிக்கவர்
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க மீண்டும் கரூர் செல்ல எங்கள் தலைவர் விஜய் விரும்பினார்; ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
@quote@விஜய் கோட், சூட் அணிந்து ஏற்படுத்திய புதிய தோற்றத்தை விட இறுதியில் எங்கள் செயல்பாடே முக்கியமானது. quote
நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம். அவரது கொள்கை உள்ளிட்டவை தான் தமிழக வெற்றிக்கழகத்தை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாற்றியது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.
இதை நீ சொன்னால் தான் அமைச்சர் ஆக இருக்க முடியும் இல்லை என்றால் காலி.
எங்க பொறுமையை சோதிக்காமல் ஒழுங்கா போங்க அங்கிட்டு....
அதிமுக காரன் 25 பேரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கு அளிக்க வைத்து, அவங்களுக்கு கொடுத்த அல்வா - வரலாற்று அல்வா. அது அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம் என்பதை நிரூபிக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி சிரிக்கிறார் போல..
we vote for tvk expecting some aggressive changes but nothing much changed same rape as usual police action. Vijay is not even willing to meet and say thanks to TN People. but again he is expecting to vote for him next time it won't work for sure.
admk வை வைத்து பிழைப்பு நடத்தும் tvk நீங்க செய்யும் செயல் கேவலமானது இனி வரும் தேர்தல்களில் இன்ஸ்ட்ராகிராம் உதவி செய்யாது குழந்தைகள் வோட்டை போடா சொல்ல மாட்டார்கள் tvk தோற்பது உறுதி
புண்ணாக்கு மூளை
உங்களுக்கு கிடைத்த பொதுவான ஓட்டு வரும் தேர்தல்களில் தொடரும் என நினைத்தால் அது தவறாக முடியும்
அப்படியா முருகா....அப்போ கொளத்தூர் படுதோல்வி பத்தி கொஞ்சம்.சொல்லேன்..
அறிவிலி
அங்க ரீல்ஸ் செல்லுபடியாகும்.இங்க செல்லுபடியாகாது.தவெக ஜால்ர சத்தம் காதக் கொடையுது. வேலையைச் செய்யுங்க.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை, முன்கூட்டியே கூட்டத்தை கூட்டி முடிவு செய்து, தமது மதத்தினருக்கு (அன்பு) கட்டளையிடும் மத அமைப்புக்கள் எல்லாம் மதச் சார்பற்றது! மதச்சார்பின்மை என்பதற்கான விளக்கத்தை நமது தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து மட்டுமே கற்க முடியும்!!
விரைவில் திரைப்பட துறையினரும் பாராட்டு விழா நடத்துவார்கள்மேலும்
-
சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––
-
காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு
-
யூடியூபர் மாரிதாஸ் கைது
-
சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு