அருள்மொழி அரசு இல்ல திருமண விழா
புதுச்சேரி: புதுச்சேரி, கிருஷ்ணா நகரைச் சேர்ந்த காவல் கட்டுப்பாட்டு அறை, வயர்லெஸ் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி அரசு - பிரேமா மேரி தம்பதியின் மகள் அன்பழகி, மூலக்குளம் பாரிஸ் நகரைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் விருதாளருமான ஜீவா - கிருஷ்ண பிரசாத் மகன் ராதாகிருஷ்ணா திருமண விழா, புதுச்சேரி சண்முகாபுரம், சர்வ சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு விழா, முதலியார்பேட்டை மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
விழாவில், மணமக்களை முதல்வர் ரங்கசாமி, என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ஜான்குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் வாழ்த்தினர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை பிரான்ஸ் சாலமன் வரவேற்று, நன்றி கூறினார்.