'ஸ்பின்னிங் மில்' சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் போராட்டம்

ஓமலுார்:ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில், 68 நிரந்தர தொழிலாளர்கள், 230 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நிரந்தர தொழிலாளர்களில், 34 பேர், சி.ஐ.டி.யு.,விலும், மற்றவர்கள், ஐ.என்.டி.யு.சி.,விலும் உள்ளனர்.

இதில், சி.ஐ.டி.யு., சங்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும், மாத சம்பளத்தில், 2,160 ரூபாய் குறைகிறது என குற்றம்சாட்டியதோடு, மில் நிர்வாகம் சம்பள பேச்சு நடத்தவில்லை என கூறி, நேற்று, அச்சங்க செயலர் ஆறுமுகம் தலைமையில், 34 பேர், மில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலுார் போலீசார், தொழிலாளர் நல அலுவலகத்தில் முறையிட அறிவுறுத்தினார். இதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement