ரூ.13 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்

இடைப்பாடி:கொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. விவசாயிகள், 336 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். 100 கிலோ பி.டி., ரகம் மூட்டை, 6,722 முதல், 8,869 ரூபாய்; டி.சி.எச்., ரக மூட்டை, 9,739 முதல், 10,309 ரூபாய்; கொட்டு ரக மூட்டை, 4,455 முதல், 5,555 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 9.41 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், மூட்டைக்கு, பி.டி., ரகம், 87 ரூபாய் விலை குறைந்தது, டி.சி.எச்., ரகம், 188 ரூபாய் விலை அதிகரித்தது.

தொடர்ந்து எள் ஏலத்துக்கு, 38 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. கிலோ, 113 முதல், 126 ரூபாய் வரை விலைபோனது. 3.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. பருத்தி, எள் மூலம், 13.17 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

Advertisement