கோவில் வளாகத்தில் கரடி கிராம மக்கள் பீதி
குன்னூர்:
குன்னூர் அருகே, கரிமொரா ஹட்டி பகுதியில், நேற்று முன்திம் நள்ளிரவு,12:00 மணியளவில் புகுந்த கரடி, கிருஷ்ணர் கோவில் அருகே உள்ள வீட்டின் சின்டெக்ஸ் தொட்டியை உடைக்க முயன்றது. உடைக்க முடியாத நிலையில் திரும்பியது. பிறகு அங்கிருந்த இரும்பு கேட்டை லாவகமாக திறந்த கரடி, கிருஷ்ணர் கோவில் வளாகத்திற்குள் நுழைந்தது.
கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்த கரடி, அங்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கேனை கடித்து உடைத்து எண்ணெயை தேடியது. அதிலும் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. வனப்பகுதிகளில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல், இது போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வர முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement