அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி

படம் உண்டு

மானாமதுரை ஜூன் 8–

மானாமதுரை கல்குறிச்சி விலக்கு ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர் கண்ணன் 55, உயிரிழந்தார்.

மானாமதுரை சாஸ்தா நகரை சேர்ந்த இவர் முத்தனேந்தல் டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளராக இருந்தார். நேற்று அதிகாலை கல்குறிச்சி விலக்கு ரோட்டில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

* தொடரும் விபத்துக்கள்: சில மாதங்களாக புது பஸ் ஸ்டாண்ட், வளநாடு விலக்கு, கல்குறிச்சி விலக்கு, கிருங்காக்கோட்டை, முத்தனேந்தல் பகுதிகளில் நடந்த விபத்துக்களில் 15 பேர் வரை பலியாகினர். இதில் பெரும்பாலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதியே விபத்து நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டிற்கு முன் இங்கு சி.சி.டி.வி., கேமரா பொருத்தியிருந்தனர். அவை தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே இது போன்று மானாமதுரை சப்-– டிவிஷனில் செயல்பாட்டில் இல்லாத சி.சி.டி.வி., கேமராக்களை செயல்படுத்தி, கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி., லோகநாதன் வலியுறுத்த வேண்டும்.

//

Advertisement