ரூ.29 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கோபி:கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 29.35 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை ஒரே விலையாக, 3,000 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்) ஒரே விலையாக, 2,840 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 1,009 மூட்டைகளை, 29.35 லட்சம் ரூபாய்க்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் கொள்முதல்
செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement