சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வரும் 22ல் துவக்கம்

ஈரோடு:ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி நடக்கிறது. இதன்படி நடப்பாண்டு ஜெயந்தி விழா வரும், 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு லட்ச ஆவர்த்தி ஹோமத்துடன் துவங்குகிறது.

23ல் மூன்றாம் கால லட்ச ஆவர்த்தி ஹோமம், 24ல் மகா அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாதருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

Advertisement