மங்குழியில் புலி நடமாட்டம் டிரோன் கேமராவில் கண்காணிப்பு
கூடலுார்: மங்குழி பகுதியில் சுற்றித்திரியும் புலியால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுார் அருகே, மங்குழி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம், காலையில் ஆண்ட்ரூஸ் என்பவரின் விவசாயத் தோட்டத்தில் புலி நடந்து செல்வதை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று, காலை 9:00 மணிக்கு, அதே பகுதியில் தாமஸ் என்பவரின் வீட்டின் கம்பி வேலியை தாண்டி புலி கடக்க முயன்றதை பார்த்து மக்கள் சத்தமிட்டதால் புலி அங்கிருந்து மறைந்தது.
கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் டிரோன் கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் கூண்டு வைத்து புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர், டி.எப்.ஓ., தேவராஜ் கூறுகையில், ''வன ஊழியர்கள் தனி குழு அமைத்து, டிரோன் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்னர்.
தானியங்கி கேமராக்கள் வைத்து புலியின் நடமாட் டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புலி நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் இரவில் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண் டும்.'' என் றார்.
மேலும்
-
போக்சோ வழக்கில் பிறழ்சாட்சியம்: ஆயுளுக்கு பதில் 20 ஆண்டுகள் சிறை
-
காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்கணும்; ஆணையர்களுக்கு உத்தரவு
-
'துாக்கி எறியும்' பொருட்களில் வண்ணமிகு கலைப்பொருட்கள்
-
கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி; ராம ரவிக்குமார் ஆவேசம்
-
சட்டசபை தேர்தலில் சரிந்த ஓட்டு சதவீதம்; சங்கத்தினரை சந்திக்க மறுக்கும் சீமான்
-
சஹாரா பாலைவனத்தில் லாரி சிக்கியது; தண்ணீர் தாகத்தில் 50 பேர் பலியான சோகம்