வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள், சமத்துார் பகுதியில் அங்கன்வாடி மையங்களிலும், கோவை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.

அதன்பின், தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்தும், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார். நகராட்சி கமிஷனர் குமரன், நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் டாக்டர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கலெக்டர் கூறியதாவது:

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு உள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழையை எதிர்கொள்ள தயார்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்கள், ஓடைகள் துார்வாரப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனையில், போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மழையினால் பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, கூறினார்.

Advertisement