வைகை அணைக்கு இரைதேடி பறவைகள் வருகை அதிகரிப்பு
ஆண்டிபட்டி:கோடை வெப்பத்தை தணிக்கவும் இரை தேடியும் வைகை அணைக்கு வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வைகை அணை நீர் தேக்கத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி நிற்கும். நீர்மட்டம் முழு அளவான 71 அடியாக உயரும் போது நீர் தேக்கப் பரப்பு 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்திருக்கும். கடந்த சில வாரங்களில் நீர்மட்டம் 21 அடியாக குறைந்ததால் நீர் தேக்கப் பரப்பும் சிறிய குளம் போல சுருங்கி விட்டது. கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மழை இல்லாததால் பல்வேறு இடங்களில் குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகள் வற்றி விட்டன. வெப்பத்தை தணிக்கவும் இரை தேடியும் கொக்கு, நாரை, நீர் காகம், நீண்ட மூக்கு நாரை போன்ற பறவைகள் வைகை அணை நீர்த்தேக்க பகுதிக்கு அதிக அளவில் வருகின்றன. பகலில் நீர் தேக்கப் பகுதிக்கு வரும் பறவைகள் இரவில் வைகை அணை வனவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன.
மேலும்
-
விபத்தில் மதுரை நர்ஸ் காயம்
-
நேந்திரன் விலை வீழ்ச்சி
-
தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு :புதிதாக கட்ட நடவடிக்கை தேவை
-
இந்தியாவுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்; நேபாள வெளியுறவு அமைச்சர் விருப்பம்
-
சர்வாதிகாரி ஹிட்லரால் உத்வேகம் பெற்றேன்; தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
-
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி