விபத்தில் மதுரை நர்ஸ் காயம்

நத்தம்:நத்தம்- அசோக் நகரை சேர்ந்தவர் சீத்தா 32. மதுரையில் நர்ஸாக வேலை செய்கிறார். வேலை முடிந்து டூவீலரில் வேம்பரளி சுங்கச்சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பைக் மோதியது. கீழே விழுந்ததில் காயம் அடைந்த சீத்தா நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

நத்தம்: மணக்காட்டூரை சேர்ந்தவர் பொன்னடைக்கன் 34. காங்கேயத்தில் கயிறு திரிக்கும் வேலை செய்கிறார். ஜூன் 5ல் ஊர் திருவிழாவிற்காக வந்தவர் அன்று இரவு அதிக அளவு மது குடித்தார். பின் சாப்பிட்டு கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார். நத்தம் எஸ்.ஐ., மலைச்சாமி விசாரிக்கிறார்.

Advertisement