நேந்திரன் விலை வீழ்ச்சி

மேட்டுப்பாளையம்: நேந்திரன் வாழையின் விலை குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இந்த மண்டியில் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன், குறைந்த பட்சம் ஐந்துக்கும், அதிகபட்சம், 25 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த இரண்டு வாரத்துக்கு முன் ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது கிலோவுக்கு, 25 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிலோ கதளி குறைந்த பட்சம், 15க்கும், அதிகபட்சம், 45 ரூபாய்க்கு ஏலம் போனது.

வாழைத்தார்கள் ஏலம் போனதில், பூவன் அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 650க்கும், தேன் வாழை, 900க்கும், செவ்வாழை, 950க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 550க்கும், மொந்தன், 300 ரூபாய்க்கும் ஏலம் போனது.

கடந்த வாரத்தை விட, இந்த வாரம் ஒரு தாரின் விலை, 50 லிருந்து, 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் திருவிழா ஏதுமில்லாததால், விலை குறைந்து ஏலம் போனது என, ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.

Advertisement