அப்துல்கலாம் நினைவிடத்தை 2 கோடி சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை 9 ஆண்டுகளில் 2 கோடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு எனுமிடத்தில் உள்ளது. இந்த நினைவிடத்தை கலைநயம் மிக்க கிரானைட் கற்களுடன் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அமைத்தது. இதனை 2017 ஜூலை 27ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி அவரது தத்ரூபமான மெழுகு சிலைகள், வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை கண்டு ரசித்தனர். இந்த நினைவிடத்தை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

நினைவிடத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை இங்குள்ள ஊழியர்கள் இயந்திரம் மூலம் கணக்கிட்டு வருகின்றனர். அதன்படி 9 ஆண்டுகளில் நேற்று மதியம் 12:35 மணியுடன் 2 கோடி சுற்றுலா பயணிகள் நினைவிடத்தை கண்டு ரசித்து உள்ளனர்.

Advertisement